past priest and history

PAST PRIEST AND HISTORY

பணகுடி முந்தைய காலத்தில் பனைவளம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இங்கு கத்தோலிக்க மக்கள் இல்லை. வடக்கன்குளம், காவல்கிணறு, கள்ளிகுளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ நாடார்கள் பனைத்தொழில் செய்வதற்காக இப்பகுதியில் வந்து குடியேறினார்கள். கி.பி. 1870-ல் வடக்கன்குளம் பங்குத்தந்தையாக இருந்த Fr. கிரகோரி அவர்கள் 5 ஏக்கர் நிலத்தை பணகுடியில் வாங்கி 2 ஏக்கர் நிலத்தை கோயில் கட்டுவதற்காகவும், மீதி 3 ஏக்கர் நிலத்தை ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு 2 சென்ட் வீதம் இனாமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவேதான் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி இன்றளவும் "சாமியார் குடியிருப்பு" என அருமையாக அழைக்கப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில் கி.பி. 1870-ல் தந்தை கிரகோரி அவர்கள் ஒரு

சிறிய தேவாலயத்தைக் கட்டினார்கள். அந்த நேரத்தில் ஒரு மாட்டு வண்டியில் புனித சூசையப்பர் சுரூபம் சேசு சபை குருக்களால் கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த மாட்டுவண்டி பணகுடி சிறிய கோயில் பகுதியைவிட்டு நகர மறுத்ததாகவும், உடனே அந்த புனித சூசையப்பர் சுரூபத்தை கோயிலில் வைத்து புனித சூசையப்பர் கோயிலாக அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. பழைய தேவாலயம் 1892-ல் புதுப்பிக்கப்பட்டது. கி.பி. 1892-ல் நமது பணகுடி ஆலயம் காவல்கிணறு பங்கோடு இணைக்கப்பட்டது. அன்றிலிருந்து காவல்கிணறு பங்கிலிருந்து தந்தைகள் மாட்டு வண்டிகளிலும், அதன்பின் மிதிவண்டியிலும் நமது ஊர் வந்து திருப்பலி நிறைவேற்றிச் செல்வார்கள்.

1894- Fr. Pouget(மாதா கோவில்) சமூகத்தினருக்கு கோயில் கட்ட அனுமதி வழங்கி மாதா கோயில் கட்டப்பட்டது. கி.பி 1938-ம் ஆண்டில் திரு இருதய சபை சகோதரர்கள் பணகுடியில் ஒரு பள்ளியைத் தொடங்கினார்கள் அப்பள்ளிதான் இன்று திரு இருதய மழலையர் பள்ளி, திரு இருதய ஆரம்பப் பள்ளி, திரு இருதய மேல்நிலைப் பள்ளி, திரு இருதய பப்ளிக் ஸ்கூல் என ஆலமரமாக பரந்து விரிந்து நிற்கிறது. கி.பி. 1939-ம் ஆண்டு டிசம்பர் 24 அன்று நம் பங்கு திரு மேதகு நிபூர்சியூஸ் ரோச் ஆண்டகை அவர்களால் தனிப்பங்காக அறிவிக்கப்பட்டது.

1. அருட்திரு சூசைநாதர்
பணகுடி பங்கின் முதல் பங்குத்தந்தை என்ற சிறப்பு பெற்றவர் அருட்திரு. சூசைநாதர் ஆவார். இவர் கி.பி. 1939 கிபி 1942 வரை நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். அவரது காலத்தில் பங்குத்தந்தைக்கு இல்லம் கட்டப்பட்டது.

2. அருட்திரு கப்ரியேல் டிவோட்டா
இவர் 1942 முதல் 1945 வரை பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். இவரது காலத்தில் 1945-ம் ஆண்டில் மரியின் ஊழியர் சபை இல்லம் கட்டப்பட்டு நமது பங்கின் கல்வி நிறுவனமான புனித ஜோசப் ஆர்.சி. துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இன்று வரை இப்பள்ளியானது நமது பங்குத் தந்தையர்களின் நிர்வாகத்தின் கீழ் மரியின் ஊழியர் சபை கன்னியர்களால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது.

3. அருட்திரு. ரெமிஜியுஸ் மிஸ்ஸர்
இவரது பணிக்காலம் 1946 முதல் 1950 வரையாகும். இவரது காலத்தில் நான் கி.பி. 1947-ம் ஆண்டில் திருவிழா திருக்கொடி ஏற்றுவதற்காக 36 அடி கல்தூண் கொடிமரம் அமைக்கப்பட்டது.

4. அருட்திரு. பெண்டீர்
1950 முதல் 1951 வரை சிறப்பாக பங்கில் ஆன்மீக காரியங்களை வார்த்தார்.

5.அருட்திரு. வியாகுலம்:
1951 1953 வரை பங்கில் சிறப்பாக இறைப்பணி புரிந்து வளர்ந்தார்.

6.அருட்திரு. சேவியர் பெர்னாண்டோ:
1953 முதல் 1956 வரை பங்கில் பல வளர்ச்சிப் பணிகள் செய்தூர். இவரது காலத்தில் 1954-ம் ஆண்டில் மரியாயின் சேனை தொடங்கப்பட்டு இன்று வார சிறப்பாக நடைபெற்று வருகிறது.

7. அருட்திரு ஜெரோமியஸ்ட:
1956 முதல் 1958 வரை தம் பங்கை சிறப்பான முறையில் வழிநடத்தி வந்தார்.

8. அருட்திரு பிரான்சிஸ்:
1958 முதல் 1960 வரை வழிபாடுகளை நடத்தி மக்களை இறையன்பில் வார்த்து வந்தார்.

9. அருட்திரு. லூர்துமணி:
1961 முதல் 1965 வரை 5 ஆண்டுகள் மிக சிறப்பாக அருட்பணி புரிந்தார். இவர் 1962-ம் ஆண்டில் புனித சூசையப்பருக்கான அலங்கார தேரை வடிவமைத்தார்.

10. அருட்திரு. பூபால் ராயர்
1965 முதல் 1967 வரை பங்கில் பல வளர்ச்சிப் பணிகளை செய்து வந்தார்.

11. அருட்திரு. ரோசரியோ கொறைரோ
1967 முதல் 1968 வரை நம் மக்கள் மனதில் இறை விசுவாசத்தை தன் போதனையால் புகுத்தினார்

12. அருட்திரு. சேவியர் இக்னேசியஸ்
1965 முதல் 1969 வரை இறைப்பணியாற்றி சென்றார். பழைய கோயிலின் மேற்கூரையை புதுப்பித்து Sound System முதல் முதலில் அறிமுகப்படுத்தினார்.

13. அருட்திரு. தேவசகாயம் பெர்னான்டோ
கி.பி. 1969 முதல் 1972 வரை பங்குத் தந்தையாக பணியாற்றினார். இவரது காலத்தில் தான் புனித சூசையப்பர் நற்பணி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் திரு அத்தனாஸ் அவர்கள் தலைவராக காணப்பட்டார். இவரது காலத்தில் வழிபாடுகளுக்கு புத்துயிர் கொடுத்தார். குறிப்பாக தவக்கால வழிபாடுகள் மிகவும் சிறப்பாக அமைந்தது.

14. அருட்திரு. . செங்கோல் மணி:
கிமீ 1972 முதல் 1977 ந்தை அவர்கள் சிறப்பான முறையில் பங்கை வழிநடத்தினார். இவரது காயத்தில் நான் இரண்டாவது ஆலயமும் புனித அந்தோனியார் கெரியும் கட்டப்பட்டது. 1976-ம் ஆண்டு தூத்துக்குடி ஆயர் மேதகு. அமலநாதர் ஆண்டலையில் மந்திரிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது.

15. அருட்திரு Fc மரிய மாணிக்கம்:
கி.பி. 1977 முதல் 1981 வரை சிறப்பான முறையில் பங்கில் வளர்ச்சிக்கு வழி வகுத்தார்

16. அருட்திரு. அமலதாஸ்
தத்தை அவர்கள் 1981 முதல் 1980 மு 5 ஆண்டுகள் பணிபுரிந்தார் இவரது காலத்தில் பக்கானதுதுறைகளில் வளர்ச்சி பெற்றது எட்டி மந்திரிக்கப்பட்டது. கோமிவைச் சுற்றி பெரிய சிலுவை பாதை ஸ்தலங்கள் அமைக்கப்பட்டது. பழைய மணி உடைந்து விட்டதால் புதிய ஆலய மணி ஒன்று வாங்கப்பட்டது. யோபுரத்தில் மிக்கேல் அதிநாதர் ஆலயம் கட்டப்பட்டது.

17. அருட்திரு அந்தோணி தான்
1986 64 1989 ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றி சென்றார்.

18. அருட்திரு பள்ளி செல்வம்
தந்தை அவர்கள் 1989 முதல் 1993-ஆண்டு வரை பணிபுரிந்தார்கள். அவர அவரது காலத்தில் குழந்தைகளுக்கு ஞாயிலு மறைக்கல்வி தொடங்கப்பட்டது. திருக்குடும்ப எயை, மாதா உபை வளர்ச்சி அடைந்தது மக்களுக்கு ஆன்மீகத்தில் கொண்டு வந்தார். அவாறு காலத்தில்தான் 1990-ம் ஆண்டில் அன்னாள் கோக புனித அன்னாள் கலை மழலையர் பள்ளி ஆங்கில வழி ல் ஆரம்பிக்கப்பட்டது இன்று இப்பள்ளி பணகுடிக்கு அருகில் சிவகாமிபுரத்தில் அள்ளாள் பெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிற்கிறது. பனித லூர்தியார் கெபி தை அவர்கள் காலத்தில் கட்டி மந்திரிக்கப்பட்டது.

19. அருட்திரு ஜேய்ஸ் பீட்டர்
இவர் 1993 1994 வரை இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இவரது காலத்தில் மக்கள் கயா ஜெரிக்கஜெய் கூட்டங்கள் நடத்தப்பட்டது. கிறிஸ்தவ பாடல்களை மக்கள் முனுமுனுக்க தொடங்கினர். இவரது காலத்தில் பங்குத்தந்தை இவ்வானது புதுப்பிக்கப்பட்டது

20. அருட்திரு தேவன்:
தந்தை அவர்கள் கி.பி. 1994 முதல் 1999 5 ஆண்டுகள் தமது பங்கில் பணிபுரிந்தார். இவரது காலத்தில்தான் பழைய கோயிலின் கோபா உச்சியில் காணப்பட்ட இயேகளின் திரு இருதய ஆண்டனின் கரூபம் மந்திரித்து வைக்கப்பட்டது. மேலும் இப்போது திருப்பன் நடைபெறுகின்ற புனித வளனார் கலையரங்கமும் அவணல் கட்டப்பட்டது. காந்துளையில் லூர்து அன்னை ஆலயம் தந்தை அவர்களால் கட்டப்பட்டது. இவரது காலத்தில்தான் றைத் தோட்டத்திற்கு கற்றுக்க எழுப்பப்பட்டது

21. அருட்திரு. ஜாண் போஸ்கோ:
இவர் 1999 முதல் 2001 வரை நம் பங்கில் பணியாற்றினார். இவரது காலத்தில் Computer அறிவு மக்களுக்கு பருத்தப்பட்டது. 2001-ம் ஆண்டு தந்தை அவர்கள் நம் ஆய வெள்ளி விழாவை வெள்ளி விழா மலர் வெளியீட்டு கொண்டாடினர்

22. அருட்திரு இலதோர்:
தந்தை அவர்கள் கி.பி. 2001 முதல் 2000 வரை 5 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது காலத்தில் தான் 2001-ம் ஆண்டு டிசம்பர் the நான் நமது ஆலயத்தை திருத்தமாக உயர்த்தினார். அவரது காலத்தில் நான் புனித ஜோசப் ஆர்.சி. துவக்கப்பள்ளியின் தெற்கு பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. அவது காலத்தில்தான் நம் பங்கில் 24 அன்பியங்கள் தொடங்கப்பட்டது. அனைத்து சபைகளும் வளர்ச்சியடைந்தன. திருப்பலியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சபை கொண்டாடும் அறை நடைமுறைக்கு வந்தது.

சேகரன்:
இவர் 2006 முதல் 2011 வரை பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். பக்த சபைகள், பக்த கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது. இவனது பணிக்காலத்தில் நான்கு வழி சாலையில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பிற்காக தந்தை அவர்கள் மக்களோடு இணைந்து அருளாளர் தேவசகாயம் கெபியை கட்டினார்கள். நமது பங்கிலுள்ள மாணவர்களுக்கு லயோலா கல்லூரி, புனித சவேரியார் கல்லூரிகளில் படிக்க வழி வகை செய்து கொடுத்தார், அவரது குருத்துவ வெள்ளி விழா நம் பங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

தாமஸ்:
கி.பி. 2011 ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார். இவரது காலத்தில் அருளானர் தேவசகாயம் கெபி வேலை முடிந்து மந்திரிக்கப்பட்டது. மேலும் புனித ஜோசப் ஆர்.சி. துவக்கப்பள்ளியின் வடக்கு பகுதி கட்டிடம் இவரது காலத்தில் தொடங்கப்பட்டது. அவருக்கு பின் வந்த பொறுப்பு தந்தை அருட்திரு. சகாயம் அவர்களால் மே மாதம் 1-ம் தேதி 2015-ல் பந்திரிக்கப்பட்டது.

அருட்திரு. நெல்சன் ராஜ்:
கி.பி. 2015 முதல் 2020 வரை ஐந்தாண்டுகள் பங்குத்தந்தையாக பணியாற்றினார். அவரது காலத்தில் தான் தற்போதைய புதிய ஆலயம் அடிக்கல் நாட்டப்பட்டு வேலை தொடங்கி நடந்து வந்தது. இவரது காலத்தல் மூன்று அன்பியங்கள் புதிதாக தொடங்கப்பட்டது

அருட்திரு. ரா. இருதயராஜ்:
தந்தை அவர்கள் 2020 முதல் பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிறார். இவரது விடா முயற்சியாலும் அயரா உழைப்பாலும் மக்களோடு இணைந்து புதிய ஆலயத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் எதிர்ப்புகளும், சோதனைகளும் வந்தாலும் எடுத்த பணியை நிறைவேற்றுவேன் என்ற சபதத்தோடு புனித சூசையப்பர் முதல் திருவிழா அன்று அர்ச்சிப்பு விழா வைத்திருக்கின்றார்கள். கொடிமரம் செய்யப்பட்டு நடப்பட்டுள்ளது. பக்த சபைகள், அன்பியங்கள் வார்ச்சி பெற்றுள்ளது. மறைக்கல்வி முறையாக அன்பாக புகுத்தப்படுகிறது. திரு இருதய ஆண்டவர் பக்தியை வெகு வேசுமாக மக்களிடம் புகுத்தி வருகிறார்

பங்கின் ஊர் திருவிழாக்கள்!:
நமது பங்கில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 22-ம் தேதி நமது ஆலய கொடியேற்றி 10 நாட்கள் காலையில் 5.45-க்கு திருப்பலியும், மாலையில் சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் ஜெபமாலை, திரு உருவ சப்பிர பணி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சபையாரும் அன்பியங்களும் ஒவ்வொரு விழாவையும் சிறப்பிக்கின்றார்கள். ஏப்ரல் 29-ம் தேதி 8-ம் திருமிழாயிற்கு புதுநன்மை வழங்குரலும் மாலை நற்கருணை பயனியும் நடைபெறும். ஏப்ரல் 30-ம் தேதி 9-ம் திருநாள் அன்று மாலையில் ஆடம்பரமான நற்கருணை ஆராதனையும் அதைத் தொடர்ந்து, தேர்ப்பவனியும் நடைபெறும். 10-ம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு தேரில் திருப்பலியும், 6 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும். பகல் 12 மணிக்கு ஒரு திருப்பலியும் நடைபெறும் மாலையில் 3 மணிக்கு திரும்பவும் சூசையப்பர் தேர் எடுக்கப்பட்டு 6 மணிக்கு தேரில் நற்கருணை ஆசிர் நடைபெறும்.

வாரத் திருப்பலி!:
ஒவ்வொரு நாளும் ஆலயத்தின் காலை திருப்பரியும், மாலையில் ஜெபமாலை, புனிதரின் மன்றாட்டு மாலை நடைபெறும் சூசையப்பர் நாளான புதன் கிழமை காலை திருப்பலி கிடையாது. மாலையில் ஜெபமாலை, புனிதரின் மன்றாட்டு, ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும் முதல் புதன் அன்று பகல் 10.30-க்கு ஜெபமாலை, நற்கருணை வழிபாடு, நற்கருணை ஆசிர், குணமளிக்கும் மன்றாட்டு, பகல் 12 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி, திருப்பலி முடிந்ததும் ஆலயத்தில் அசனம் நடைபெறும். மாலையில் 6.30க்கு ஜெபமாவை புனிதரின் மன்றாட்டு மாலை, புனிதரின் திருவுருவப்பயனி, ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும் ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு இறை இரக்கத்தின் மன்றாட்டு நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் காலையிலும் மாலையிலும் பல சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றது.

ஏனைய திருவிழாக்கள்!:
ஜனவரி மாதம் அந்தோணியார் திருவிழா 13 நாட்கள் காலையில் திருப்பலி, மாலையில் நற்கருணை ஆசீரோடு கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் மாதா திருவிழா ஆகஸ்ட் 30-ல் தொடங்கி செப்டம்பர் 6-ம் தியதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படும். மார்ச் 19-ம் தேதி புனித சூசையப்பர் திருவிழா கொண்டாடப்படும். டிசம்பர் மாதம் திருக்குடும்ப திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும்

அன்பியங்கள்:
27 அன்பியங்கள் நம் பங்கில் உள்ளன. ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு அன்பியம் திருப்பலியை சிறப்பித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு வீட்டில் அதாவது 27 வீடுகளில் அன்பியங்கள் நடைபெறுகின்றன. அன்பியங்கள் மூலம் 1ரூ திட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழாக் காலங்களில், கிறிஸ்துமஸ் காலங்களில் அன்பியம் ஒரு நாளை சிறப்பிக்கின்றது.

பக்த சபைகள்:
நமது பங்கில் திருக்குடும்ப சபை, மாதா சபை, மரியாயின் சேனை, பாவர் சபை, நற்கருணை வீரர் சபை, சூசையப்பர் நற்பணி மன்றம், புனித வானார் இனைஞர் சபை, வின்சென்ட் தே பவுல் சபை, உதவும் கரங்கள் என பல சபைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பாடகர் குழு:
திருப்பலிக்கும். அனைத்து வழிபாடுகளிலும் பாடகர் குழு பாடல்கள் பழகி அருமையாக பண்ணிசைத்து பாடி திருப்பலிகளை சிறப்பிக்கிறார்கள். பாடகர் குழுவில் ஆண்களும் பெண்களும் பாடுவது மிக அருமை

மறைக்கல்வி:
ஞாயிறு திருப்பலி முடிந்ததும் மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறுகிறது. LKG முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். கோடை விடுமுறையில் 10 நாட்கள் VBS வகுப்புகள் நடைபெறுகிறது.

கல்வி நிறுவனங்கள்:
மரியின் ஊழியர் சபை கன்னியர் மடம், திரு இருதய சபை சகோதரர்கள், புனித அன்னாள் சபை கன்னியர்கள் சேர்ந்து நம் பங்கில் பணியாற்றுவது பங்கின் தனிச் சிறப்பாகும். அமூவருமே கல்வி நிறுவனங்கள் நடத்தி பணகுடியை வார்ச்சிப் பாதைக்கு கொண்டு செய்வது மேலும் அழகூட்டுகிறது.

பங்கின் துணை பங்குகள்:
பணகுடி மாதா ஆலயம், வடலியிளை புனித சவேரியார் ஆலயம், ரோஸ்மியாபுரம் புளித மிக்கேல் அதிதூதர் ஆலயம் பங்கின் கீழ் செயல்பட்டு வருகின்றது. மாதா கோயிலில் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குத் தந்தையால் திருப்பலி வைக்கப்படுகிறது. மாதா கோயிலில் நவம்பர் 29-ம் தேதி கொடி ஏற்றப்பட்டு டிசம்பர் 8-ம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படுகிறது. வடலிவிளையில் நவம்பர் 24-ம் தேதி கொடி ஏற்றப்பட்டு டிசம்பர் 3-ம்தேதி வரை திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஊர் அசனம்:
ஒவ்வொரு வருடமும் தவக்காலத்தில் ஊர் அசனம் நடைபெற்று வருகிறது.

தவக்கால சிறப்பு::
தவக்காலங்களில் ஒருநான் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள். பங்குத்தந்தை தலைமையில் சென்று வருகிறார்கள். தவக்காலங்களில் ஆலயங்களைத் தரிசித்து சிலுவைப்பாதை செய்துவர 7-8 பஸ்கள் ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊணிலிருந்து சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை சிலுவை பாதை, நற்கருணை ஆசிர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் கீழ் சுமார் 1200 குடும்பங்களுடன் புனித சூசையப்பர் திருத்தலம் இயங்கி வருகிறது. இங்கு புனித சூசையப்பர் அருளால் பல புதுமைகளும். அற்புதங்களும் நடைபெற்று வருவதால், சுற்று வட்டாரங்களிலிருந்து நிறைய மக்கள் வந்து செல்கின்றார்கள் உயிருள்ள கடவுள் உயிரோடு உறையப் போகும் புதிய ஆலயத்தின் வழியாக நாம் நம் வாழ்வில் நிறைய ஆசீர்வாதங்களைப் பெற்று வளமோடு வாழ்வோம். இதனால் நம் பங்கு மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்!!

Copyright © St.Joseph Church Panagudi. All Rights Reserved.